மகிந்தவின் ஆட்சேபனையை தொடர்ந்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அமர்வு ஓத்தி வைக்கப்பட்டுள்ளது.

224

ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இடம்பெற்றிருப்பதற்கு  குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சேபனை தெரிவித்ததை தொடர்ந்து இன்றைய அதன் அமர்வு ஓத்திவைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விளம்ரங்கள் தொடர்பாக ஐடிஎன் தொலைக்காட்சிக்கு உரிய கட்டணங்கள் செலுத்தப்படாதது குறித்து வாக்கமூலம் அளிப்பதற்காக ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் முன்னாள் ஜனாதிபதி இன்று ஆஜராகியிருந்தார்.

எனினும் ஆணைக்குழுவின் அமர்வு ஆரம்பமானதும் ஆணைக்குழுவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிரசன்னமாகியிருப்பதற்கு முன்னாள் ஜனாதிபதியின் சட்டத்தரணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதன் காரணமாக அதன் அமர்வு நாளை வரை ஓத்திவைக்கப்பட்டது.

SHARE