மக்கள் போராட்ட பாத யாத்திரைக்கு முன்னர் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பத்துப் பேரை கைதுசெய்து சிறையிலடைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 28ம் திகதி குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்தநிலையில், இது தொடர்பில், இன்று உடுகம்பல பிரசன்ன ரணதுங்கவின் வீட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மஹிந்தானந்த மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
மேலும், இந்தப் போராட்டம் காரணமாக பயமடைந்துள்ள அரசாங்கம் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரைத் தடுக்க தயாராகி வருவதாகவும், அவர் கூறியுள்ளார்.
என்ன நடந்தாலும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை நிறுத்த முடியாது எனவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.