மகிந்தவின் மெய்க்காவலர்களின் 72 வங்கிக்கணக்குகள் சிக்கலில்…

258

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின், மூன்று மெய்ப்பாதுகாவலர்களின், வங்கிக்கணக்குகள் மற்றும் நிதிநிறுவனக் கணக்குகள் தொடர்பாக விசாரணை செய்ய, நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பண மோசடித் தடுப்பு சட்டத்தின் கீழ், மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே, இந்த விசாரணைகளுக்கு கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்ற நீதிவான், நிசாந்த பீரிஸ், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.

மகிந்த ராஸஜபக்சவின் மெய்ப்பாதுகாவலர்களான, மேஜர் நெவில் வன்னியாராச்சி, கப்டன் திஸ்ஸ விமலசேன, கோமின் ரணசிங்க ஆகியோரின், 72 வங்கி மற்றும் நிதி நிறுவனக் கணக்குகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.major-nevile

SHARE