மகிந்தவிற்கு வால் பிடிக்கும் மூன்.

683

மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அனைத்தின மக்களிடையே சமாதானம் மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூன், தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை மாலை, ஜனாதிபதிக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ள பான் கி மூன், தனது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொண்டதுடன், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதில் ஜனாதிபதியின் அர்ப்பணிப்பை பாராட்டியுள்ளார்.

அத்துடன், தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தை விரைவில் நிறைவேற்றுவதைப் பார்வையிட தான் ஆவலாக உள்ளதாகவும் மூன் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, மூனுக்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி, 20ஆவது திருத்தச் சட்டமூலத்தினூடாக நாட்டில் புதிய தேர்தல் முறையொன்றை ஏற்படுத்துவதும் அதன் மூலம் நல்லாட்சி கலாசாரமொன்றை உருவாக்குவதே தனது நோக்கமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கலந்துகொள்ள தான் எதிர்பார்ப்பதாகவும் புதிய அரசாங்கமொன்றை உருவாக்குவதன் மூலம் தன்னால் அதில் பங்கேற்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

19 20பற்றிக் கதைப்பதை விட இன்னும் எவ்வளவோ வேலைகள் உள்ளது இதனது அர்த்தம் மகிந்த சார்புப் போக்கு என அவதானிகள் கூறுகிறார்கள்

SHARE