மகிந்தவுக்கும் பதவி வழங்கும் மைத்திரி – ரணில் அரசு!

374

 

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கு நிகரான அதிகாரங்கள் மற்றும் வசதிகளை கொண்ட மாவட்ட இணைப்பு குழுத் தலைவர் பதவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
JUSL

தேர்தலில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த பதவியை முறையை அறிமுகம் செய்துள்ளார். இதற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில், அமைச்சரவை அதிகாரங்களை கொண்ட குருணாகல் மாவட்ட இணைப்பு குழுத் தலைவராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட உள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

22 மாவட்டங்களில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு இந்த பதவிகள் வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில், ஐக்கிய தேசியக் கட்சி 11 தலைவர் பதவிகளும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 8 தலைவர் பதவிகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 3 தலைவர் பதவிகளும் வழங்கப்பட உள்ளன.

SHARE