இலங்கையில் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நல்லாட்சி அரசு பல்வேறு உறுதி மொழிகளை வழங்கிவருகின்றது.
எனினும், இந்த உறுதி மொழிகள் தொடர்பிலும், நல்லாட்சி அரசு மீதும் பல்வேறுபட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடத்தப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சரியான பதில் கிடைத்திருக்கின்றனவா..? அல்லது அவர்களால் உருவாக்கப்பட்டுள்ள ஆணைக்குழுக்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளதா…?
குறித்த விடயம் தொடர்பில் மனித உரிமையும், அபிவிருத்திக்குமான நிலையத்தின் உறுப்பினர் ஸ்டீபன் சுந்தரராஜ் வதனா தமது கருத்துக்களை லங்காசிறி செய்தி சேவையுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.