பிரபல சிங்கள பாடகி சமிதா எரந்ததி முதுன்கொட்டுவ குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இது குறித்து சமிதாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொலை செய்ய கொழும்புக்கு வந்திருந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு தங்குமிடத்தை வழங்கியதாக சமிதா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக விசாரணை நடத்தவே குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரை அழைத்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மூலமாகவே சமிதாவுக்கு விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் அறிமுகமானதாக கூறப்படுகிறது.