மகிந்தவை பிரதமராக்கும் போராட்டத்தை கைவிடுவதில்லை – விமல் வீரவன்ச

348
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதம வேட்பாளராக நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் புதிய தேசிய கூட்டணியில் மகிந்த ராஜபக்சவை பொது தேர்தலுக்கு அழைத்துவருதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தள்ளார்.

நேற்று பிபிலயில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பட்டுள்ளார்.

நமது நாடு சந்திக்கும் பாரிய அனர்த்தத்திலிருந்து நாட்டை கட்டியெழுப்ப கூடிய ஒரே தலைவர் மகிந்த ராஜபக்ச மாத்திரமே.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மகிந்த ராஜபக்ச பற்றி குறிப்பிடும் கருத்துக்கள் எதுவும் அவருடைய சொந்த கருத்துக்கள் அல்ல.

தற்போதைய அரசாங்கம் அறிவிக்கும் அறிக்கைகள் அனைத்தும் பனி மழை போல் உருகிக்கொண்டிருக்கின்றது.

முன்னோக்கி சென்று கொண்டிருந்த நாடு இன்று ஒரு இடத்தில் அப்படியே நின்றுவிட்டது.

பொது தேர்தலில் மகிந்த ராஜபக்ச பிரதம வேட்பாளராக நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றாலும் மகிந்தவை பிரதம வேட்பாளராக்கும் போராட்டத்தை கைவிடுவதாகவும் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE