மகிந்த அணியினரின் கோரிக்கைக்கு மாநகர சபை மறுப்பு

142

நாளை கொழும்பில் நடைபெறவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு பதிவு செய்யப்பட்டிருந்த கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான 5 மைதானங்களை வழங்குவதற்கு கொழும்பு மாநகர சபை மறுப்பு தெரிவித்துள்ளது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் சிலரால் கடந்த ஒகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் கட்டணங்கள் செலுத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டிருந்த குறித்த மைதானங்களை வழங்க முடியாது என கொழும்பு மாநகர சபையின் நகராதிபதி ரோஸி சேனாநாயக்க மற்றும் மாநகர சபை ஆணையாளர் ஆகியோர் தெரிவித்துள்ளார்.

குறித்த ஆர்ப்பாட்டத்திற்காக காலி முகத்திடல், கெம்பல் மைதானம், விகாரமாதேவி பூங்கா, ஹைட் மைதானம், ஹென்றி பெட்ரிஸ் மைதானம் ஆகியன பதிவு செய்யப்பட்டிருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

SHARE