மகிந்த அணியில் இணையும் மாகாண சபை உறுப்பினர்கள்

192

nadai554-300x250

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டில் உள்ள மாகாண சபை ஒன்றின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களின் பெரும்பாலானவர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பிக்கப்பட உள்ள அரசியல் அமைப்பில் இணைந்து கொள்ள தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த வருடத்தில் பதவிக்காலம் முடியும் மாகாண சபை ஒன்றின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதுடன் கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர் ஒருவரிடம் அது குறித்து அறிவித்துள்ளதாக பேசப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் அடுத்த தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது கிராம மட்டத்தில் வெளிப்படையாக தெரிவதாகவும் இதன் காரணமாக தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

தேர்தல் நெருங்கும் தருவாயில் ஏனைய மாகாணங்களை சேர்ந்த உறுப்பினர்களும் புதிய அரசியல் அணியுடன் இணைந்து கொள்வார்கள் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE