மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும், கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று கைது செய்யப்படுவார் ?

255

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும், கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைக்கு முன்னிலையாகத் தவறிய நாமல் ராஜபக்சவுக்கு எதிராக, ஆணைக்குழுவினால், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையிலேயே நாமல் ராஜபக்ச கைது செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

விசாரணைக்கு முன்னிலையாகத் தவறியமை, விசாரணைக்குத் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்காதமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நாமல் ராஜபக்ச கைது செய்யப்படவுள்ளதாக, தமக்கு காவல்துறையிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.namal

SHARE