தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பாரத் அனே நேனு படம் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மகேஷ் பாபுவுக்கு கவுரவமளிக்கும் விதத்தில் அவருக்கு மெழுகு சிலை மேடேம் டுசாட்ஸில் நிறுவப்படவுள்ளது. இதை மகேஷ் பாபுவின் மனைவி உறுதிப்படுத்தியுள்ளார்.
இதை அறிந்த ரசிகர்கள் தற்போது ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.
இதற்குமுன் பாகுபலி படத்தில் நடித்த பிரபாஸுக்கு சிலை நிறுவப்பட்டது. தற்போது மகேஸ் பாபு இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.
இதுவரை ரஜினி உட்பட எந்த தமிழ் நடிகருக்கும் இந்த கௌரவம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.