
கீர்த்தி சுரேஷ்
ஏ.எல்.விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். நிறைய கமர்சியல் படங்களில் நடித்த இவருக்கு, ‘நடிகையர் திலகம்’ படம் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்திற்காக தேசிய விருதும் பெற்றார்.
இதன்பின் இனி தன் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாகக் கூறியிருந்தார். அதன்படி கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் பெண்குயின் படத்தில் கர்ப்பிணியாக நடிக்கிறார். அதேபோல் ரஜினி-சிவா கூட்டணியில் உருவாகும் அண்ணாத்த படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
