மக்களிடம் கொள்ளையடித்த நிதி மக்களிடமே வழங்கப்பட வேண்டும்! ஜீ.எல்.பீரிஸ்

256

------.---------.------------------

வற் வரி அதிகரிப்பு என்ற பெயரில் நல்லாட்சியால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீண்டும் மக்களிடமே வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த வற் வரி குழப்பங்களுக்கு அரசாங்கமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வற் வரி அதிகரிப்பு யோசனை பாராளுமன்றத்தின் அனுமதியுடன் அல்லாமல் தன்னிச்சையாகவும், சட்டவிரோதமாகவும் கொண்டு வரப்பட்ட ஒன்றெனவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எனவே வற் வரிக்னெ ஒதுக்கப்பட்ட நிதியை வைத்து கொண்டிருக்காமல் நீதிமன்றின் உத்தரவுக்கமைய குறித்த நிதியினை நிவாரணமாக மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE