மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற அறம் படத்தின் இயக்குனரின் அடுத்த படம்! கதை இதுதானாம்

138

நயன்தாரா ஜில்லா கலெக்டராக நடித்து மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற படம் அறம். சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அரசு அதிகாரிகளும் பாராட்டினர்.

இப்படத்தை இயக்கியவர் நயினார் கோபி. இவர் தற்போது ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்த படத்திற்கு அவர் தயாராகிவிட்டாராம்.

வடக்கே மிகவும் பெயர் பெற்றவர் பிர்ஸா முண்டா. பழங்குடியின மக்களுக்காக போராடி ஆங்கிலேயரை எதிர்த்து உயிர்விட்டவர். அவர் இறக்கும் போது வயது 25 தானாம்.

இவரின் வாழ்க்கையை தான் கோபி படமாக்குகிறாராம். இரண்டு ஆண்டுகள் இதற்காக ஆராய்ச்சி செய்து தற்போது கதையை எழுதி முடித்துவிட்டாராம்.

பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இப்படத்தில் நடிக்க முன்னணி நடிகர் ஒருவரை தேடி வருகிறாராம்.

SHARE