முல்லைத்தீவு குமுழமுனை மகாவித்தியாலயத்தில் பல்கலைக்கழகம் தெரிவாகிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று 11.00 மணிக்கு நடைபெற்றது. இதில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறுகையில்,
எமது விடுதலைப் போராட்டமானது வடிவம் மாறி தொடர்ந்து கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் நாம் கற்ற கல்வியே.
மக்களின் பல்வேறுபட்ட அடிப்படைப் பிரச்சனைகள் தீர்ப்பதற்து கல்வியே முக்கியகாரணமாகவுள்ளது. இந்தக் கல்விச் செல்வம்தான் எங்களுக்கு உண்மையாகவே நிலைபேறானது.
இது காலத்தில் பயிர் செய்யவேண்டியது வரவு இல்லாமல் கல்வியை நாம் செலவு செய்து வாழும் இனிமையான காலம் இது இந்தக்காலத்தை நாம் முற்று முழுதாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எதிர் காலத்தில் உயர்ந்த மதிக்கத்தக்க நல்ல மணிதர்களாக வாழமுடியும் என்று குறிப்பிட்டார்.
குமுழமுனையில் பல்கலைக்கழகம் தெரிவாகிய மாணவர்கள் கௌரவிப்பு
முல்லைத்தீவு குமுழமுனை மகாவித்தியாலயத்தில் 2014 2015 பல்கலைக்கழகம் தெரிவாகிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அனைத்துபல்கலைக்கழகம் மற்றும் கல்வியற் கல்லூரி மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பட்டில் நேற்று காலை 11.00 மணிக்கு ஆரம்பமாகிநடைபெற்றுள்ளது. குமுழமுனை மகாவித்தியாலயத்தில் கல்விகற்று பால்கலைக்கழகம் தெரிவாகிய மாணவர்களே இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வன்னிமாவட்ட பா.உ சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா சிறப்பு விருந்தினராக ஓயவுபெற்ற முன்னாள் துனுக்காய் வலய கல்விக்கழக பிரதிகல்விப்பணிப்பாளர் திரு.ராஜேஸ்வரன் கௌரவவிருந்தினராக குமுழமுனை மகாவித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் திரு கமலநாதன் மற்றும் கல்விமான்களும் பெற்றோர் பாதுகாவலர்களும் கலந்து சிறப்பித்தனர்.