தலைமன்னார் இறங்குதுறை பகுதியில் மணல் அகழ்வு பணி மேற்கொள்ள முன்னெடுக்கப்பட்ட முயற்சிக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (22.02.2024) இடம்பெற்றுள்ளது.
தலைமன்னார் இறங்கு துறை, தலைமன்னார் ஊர் மனை, தலைமன்னார் ஸ்டேஷன் பகுதி மக்கள் ஒன்றிணைந்து இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
ஒப்பந்த நிறுவனம்
இந்த சந்தர்ப்பத்தில் தலைமன்னார் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு சென்றிருந்ததோடு எவ்வித அனுமதியும் இன்றி மக்களுக்கு எவ்வித அறிவுறுத்தல்களும் வழங்கப்படாமல் மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்காக சகல ஆயத்தங்களுடனும் குறித்த குழுவினர் வருகை தந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் அப்பகுதிக்கு வருகை தந்த மணல் பரிசோதனை குழுவினர் தாங்கள் ஒரு ஒப்பந்த நிறுவனம் என்றும் தமது ஒப்பந்தத்தினை காண்பித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், மக்களின் தொடர்ந்து எதிர்ப்பை வெளியிட்டதையடுத்து குறித்த குழுவினர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தலைமன்னார் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.