மக்களின் தேவையை உணர்ந்து சேவை செய்ய நல்லதோர் ஜனாதிபதி உருவாகியுள்ளார்.

173

நாட்டின் நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பமாகி ஒரு வருடமாகிவிட்ட நிலையில் இந்த நல்லாட்சியை உருவாக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சீமெந்து பக்கட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு (17) நேற்று நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (3)

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

நாட்டு மக்களின் தேவை உணர்ந்து சேவை செய்வதற்கென நல்லதோர் ஜனாதிபதி உருவாகியுள்ளார். கடந்த காலங்களில் ஒரு மாவட்டத்தில் மட்டும் சேவை முன்னெடுப்புகள் இடம்பெற்றது.

இப்பொழுது நாடளாவிய ரீதியில் சேவைகளை முன்னெடுக்கப் படுவதுடன் எமக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும், நாட்டில் பரந்தளவிலான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள ஊழல் மோசடிகளும் கண்டறியப்பட்டு ஊழல் அற்ற நாடு ஒன்றுக்கான வேலைத்திட்டங்களை ஜனாதிபதி முன்னெடுத்து வருகின்றார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (5)

இதேவேளை பெருந்தோட்ட பகுதிகளில் அபிவிருத்திகளை துரிதப்படுத்தும் இலக்கையும் ஜனாதிபதி மேற்கொண்டுள்ளதுடன், தோட்டப்பகுதிகளில் மக்களின் பாவனைக்குதவாத பிரதான வீதிகள், கல்வி நடவடிக்கைகள், வீடு மற்றும் காணி விடயங்களில் பின்னடைவுகளை சந்தித்து வரும் பகுதிகளை அபிவிருத்தி செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (4)

இந்த வகையில் மக்களால் பூர்த்தி செய்யப்படாத குடியிருப்பு மற்றும் வீதிகள் ஆகியவற்றை பூரணப்படுத்திக் கொள்வதற்கு சீமெந்து பக்கட்களும் வழங்கப்பட்டு வருகின்றது எனவும், இதன் பயனை மக்கள் அனுபவித்து கொள்ள வேண்டும் எனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் அமைச்சர் உட்பட மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.இராஜாராம், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் அதிகாரிகள், மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளர் நாயகம் சுப்பிரமணியம், உபதலைவர் ஜெயபாரதி, நிர்வாக செயலாளர் கிருஷ்ணன் என பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE