மக்களுக்காக எடுக்கப்பட்டுள்ள விசேட நடவடிக்கை! எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது

125

கண்டி தளதா மாளிகையின் வருடாந்த பெரஹெராவிற்கு செல்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு விசேட புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த விசேட புகையிரத சேவைகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இன்று காலை 9.50 மணியளவில் புறப்பட்ட புகையிரதம் பிற்பகல் 1.15 மணியளவில் கண்டியை சென்றடையும்.

அதேவேளை இன்று இரவு 11.45 மணிக்கு கண்டியில் இருந்து புறப்படும் புகையிரதம் நாளைய தினம் காலை 3.01 இற்கு கொழும்பு கோட்டையை அடைந்துவிடும்.

அத்துடன், கண்டியில் இருந்து மாத்தளை வரையிலும், மாத்தளையில் இருந்து கண்டி வரையிலும் விசேட புகையிரத சேவைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளது.

மேலும், புகையிரதத்தில் பயணிக்கும் மக்கள் அடையாளம் தெரியாதவர்களால் வழங்கப்படும் உணவு உள்ளிட்ட பொருட்கள் பெற்றுக் கொள்வதை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புகையிரதங்களில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்வதையும் பயணிகள் தவிரத்துக் கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE