ஜி.வி.பிரகாஷ் சமீப காலமாக மக்களின் பிரச்சனையை உடனுக்குடன் டுவிட்டரில் தெரிவித்து வருகின்றார். அதோடு மட்டுமின்றி தானே களத்தில் இறங்கியும் போராடுகிறார்.
இந்நிலையில் தமிழகத்தில் நெடுவாசன் போராட்டம் நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே போகின்றது.
இதற்கு பல திரை நட்சத்திரங்கள் தங்கள் ஆதரவை தந்து வருகின்றனர், தற்போது ஜி.வி.பிரகாஷும் தன் பங்கிற்கு இதற்காக ஒரு ஆல்பம் தயார் செய்யப்போகின்றாராம்.
அது மட்டுமின்றி வரும் ஞாயிறு அன்று களத்திலேயே இறங்கி இவரும் போராட உள்ளாராம்.