மக்களுக்கு அன்பு ஒபாமா மேல தான் 

129

அமெரிக்காவில் உள்ள ஹொட்டலுக்கு மனைவியுடன் உணவருந்த சென்ற ஒபாமாவை பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்ற வீடியோ வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறி விட்டாலும், மக்கள் அவர் மீது வைத்துள்ள அன்பு குறையவில்லை.

இதற்கு உதாரணமாக இரு தினங்களுக்கு முன்னர் பொது இடத்தில் ஒரு சம்பவம் நடைப்பெற்றது.

பிரபல அமெரிக்க இசையமைப்பாளர் Bonoவுடன் இரவு விருந்து சாப்பிட அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள பிரபல ஹொட்டலுக்கு ஒபாமா வந்தார்.

அவருடன் மனைவி michelleயுன் உடன் வந்தார். ஹொட்டல் உள்ளே ஒபாமா நுழைந்தவுடன் அங்கிருந்த பொது மக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

கூட்டத்தில் ஒரு பெண் ஒபாமா உங்களை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம் என உணர்ச்சிபூர்வமாக கத்தினார்.

இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

SHARE