மக்களே உஷார்! இந்த நோய் உங்க உயிரையே பறிக்குமாம்

116

செப்சிஸ் என்பது தொற்றுகளால் ஏற்படும் ஒரு உயிர்கொல்லி நோயாகும். இது நமது நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமடைவதால் ஏற்படும் நோயாகும்.

செப்சிஸ் உடலில் உள்ள பல பாகங்களை பாதித்து அவற்றை செயலிழக்க வைக்கக்கூடும்

செப்சிஸ் காரணங்கள்
  • நிமோனியா, வயிறு தொடர்பான தொற்றுகள், சிறுநீரக தொற்றுகள், இரத்தத்தில் ஏற்படும் தொற்றுகள் போன்றவை முக்கியமான காரணங்களாகும்.
  • நோயெதிர்ப்பு மண்டலம் பல்வவீனமாக இருப்பதும், வயதும் கூட செப்சிஸ் ஏற்பட காரணமாக அமைகிறது.

அறிகுறிகள்
  • காய்ச்சல் வரும் பொழுது 101 டிகிரிக்கு மேல் காய்ச்சல் அடிப்பது, இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 90க்கு மேல் இருப்பது, வழக்கமான மூச்சு விடுதலை விட 20 முறை அதிக மூச்சு விடுவது போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.
  • சருமத்தில் துளைகள் அல்லது சருமத்தின் நிறம் மாறுதல், சிறுநீரின் அளவு குறைதல், அதீத சோர்வு, இதய செயல்பாடுகளில் மாற்றம், மூச்சுவிடுவதில் சிரமம் என்பதும் இதன் முக்கிய அறிகுறிகளாகும்.
  • கடுமையான செப்சிஸ் மற்றும் செப்சிஸ் ஷாக் போன்றவை உங்கள் இரத்தத்தில் சிறிய கட்டிகளை உடல் முழுவதும் உருவாக்கிவிடும். இதனால் உடல் உறுப்புகள் செயலிழப்பு, திசுக்களின் செயலிழப்பு போன்றவை ஏற்படலாம்.
தடுக்கும் முறைகள்
  • ஆரம்ப நிலையிலேயே போடப்படும், இரத்த அழுத்தத்தை சீராக வைக்க வஸோக்ட்டிவ் மருந்துகள், சர்க்கரை அளவை சீராக வைக்க இன்சுலின் ஊசிகள் போடுவது மிகவும் நல்லது.
  • தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பாக இருப்பதே செப்ஸியை தடுக்கும் முக்கிய வழியாகும்.
  • மேலும் நிமோனியா மற்றும் மற்ற தடுப்பூசிகளை தவிர்க்காமல் போடுவது, சுகாதாரமாக இருத்தல், ஏதேனும் நோய் ஏற்பட்டால் உடனடியாக அதற்கு சிகிச்சை எடுப்பது போன்றவை இதனை தடுக்கும் முறைகளாகும்.
  • சர்க்கரை வியாதி இருந்தாலோ, எய்ட்ஸ், ஹெப்பாடிட்டீஸ் போன்ற நோய்கள் இருந்தாலோ உடனடியாக செப்ஸிஸ் சோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.
  • இரண்டு மாதத்திற்கு குறைவான குழந்தைக்கு காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும்.
SHARE