மக்களை மகிழ்வித்த ஐ.எஸ் தீவிரவாதிகள்

313

ஈராக் மற்றும் சிரியாவின் பொது வீதிகளில் படுகொலைகள் மட்டுமே செய்து வந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் முதன் முறையாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தி மக்களை மகிழ்வித்துள்ளனர்.

ஐ.எஸ் தீவிரவாதிகளின் கீழ் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக வெளி உலகை நம்ப வைக்கும் பணியில் அந்த அமைப்பு தற்போது களமிறங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக சிரியாவின் நினிவே மண்டலத்தில் அமைந்துள்ள தல் அஃபர் பகுதியில் முதன் முறையாக விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. இந்த நிகழ்வுகளில் பங்கேற்கும் பொருட்டு அப்பகுதி மக்களை கட்டாயப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெரும்பாலான மக்கள் அவர்களின் குணம் அறிந்து உயிர் மீது கொண்ட ஆசையில் நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்க்க சென்றுள்ளனர்.

5 வயது சிறுவர்கள் முதல் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். வயது முதிர்ந்தவர்களையும் ஆட்டத்தில் கலந்துகொள்ள வைக்கப்பட்டாலும் அனைத்து போட்டிகளிலும் ஜிகாதிகள் வெற்றி பெறும்படி பார்த்துக்கொண்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வெளியிட்ட அறிக்கையில், சமூக ஊடகங்களில் ஐ.எஸ் ஆதரவாளர்களின் பங்களிப்பு கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 45 விழுக்காடு சரிந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இதன் எதிரொலியாக ஐ.எஸ் அமைப்பினர் இந்த விளையாட்டு நிகழ்ச்சிகள் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

625.0.560.320.500.400.194.800.668.160.90 (1) 625.0.560.320.500.400.194.800.668.160.90 (2) 625.0.560.320.500.400.194.800.668.160.90

 

 

SHARE