நாட்டு மக்களை வறுமையிலிருந்து விடுவித்து அவர்களுக்கு சிறந்ததோர் வாழ்க்கை நிலையை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு அனைத்து ஆட்சியாளர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என கொழும்பு பேராயர் காடினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நத்தார் விழா பேராயர் காடினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோர் தலைமையில் நேற்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய ஆண்டகை,
இங்கு விசேட உரை நிகழ்த்திய கொழும்பு பேராயர் காடினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, உண்மையான நத்தார் என்பது உண்டு களித்து மகிழ்வது மட்டுமல்லாது, வறிய மக்களின் துயரங்களை புரிந்துகொண்டு அவர்களது பசியை போக்குவதற்காக ஒன்றுபடுவதாகுமெனக் குறிப்பிட்டார்.
நாட்டு மக்களை வறுமையிலிருந்து விடுவித்து அவர்களுக்கு சிறந்ததோர் வாழ்க்கை நிலையை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு அனைத்து ஆட்சியாளர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் முக்கியமாகும் என தெரிவித்தார்.
இந்த நத்தார் விழாவில் இலங்கைக்கான திருத்தந்தையின் பிரதிநிதி பியரே நுயன் வென் டொட் ஆயர் உள்ளிட்ட அருட் தந்தைகள் மற்றும் அருட் சகோதரிகள், சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர் ஜோன் அமரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, ஆர்.சம்பந்தன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கலைஞர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.