மக்கள்போராட்டத்தில் அரசியல்வாதிகளின் தலையீடு சரியா? தவரா?

308

மூன்றாவது நாளாகவும் தொடரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம்

மக்கள்போராட்டத்தில் அரசியல்வாதிகளின் தலையீடு சரியா? தவரா?


மூன்றாவது நாளாகவும் தொடரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம்

கேப்பாபுலவு மக்கள் மூன்றாவது நாளாக தமது காணி தொடர்பிலான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த இடத்தில் ஊடகச் சந்திப்பு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன்

இதன் போது மக்கள் நலன் சார்ந்த ஒரு முடிவை அவர் முன்வைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

போராட்டத்தில் ஈடுபடும் வேளையில் விமானப்படையினரின் போக்கு வரத்துக்கு தடங்கல் ஏற்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் போராட்டத்தில் சிறுவர்கள் பங்கு பற்றுவதை தவிர்க்க வேண்டுமென சிறுவர் நன்நடத்தைப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் மக்கள் பிரதிநிதிகள் தமக்கு உரிய தீர்வினைப் பெற்றுக்கொடுக்காவிட்டால் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி குறித்த போராட்டம் தொடர்பாகவும் அவர்களின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பாகவும் அறிந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் மக்களுக்கான சிறந்த தீர்வை முன்வைப்பார் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

SHARE