மக்கள் அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டுமென அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றிலும் தொலைக்காட்சியிலும் காண்பதனைக் கொண்டு மக்கள் பிழையான கருதுகோள்களை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
20 ஆண்டுகளின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்துள்ளதாகவும், கடந்த ஆண்டு வரையில் ஐக்கிய தேசியக் கட்சியினால் ஆட்சி அமைக்க முடியும் என எவரும் கருதவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அரசாங்கத்தை பாதுகாத்தால் மட்டுமே, மக்களுக்கு சேவைகளை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய இனப்பிரச்சினை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலேயே தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு கிழக்கிற்கு நிரந்தர அரசியல் தீர்வுத் திட்டமொன்றை வழங்க வேண்டுமென்றே ஜனாதிபதியும், பிரதமரும் விரும்புகின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரதான இரண்டு அரசியல் கட்சிகளும் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் இது ஓர் ஆரோக்கியமான நிலைமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.