யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து ஆட்சிமாற்றத்தின் பின்னர் மீள் குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படாமலிருந்த 2 வீதிகள், 7 ஆலயங்கள் மற்றும் ஒரு பாடசாலை, 60 வீடுகள் ஆகியவற்றை விடுவிப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சு ஒப்புதல் வழங்கியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக யாழ்.மாவட்டச் செயலர் என்.வேதநாயகன் நேற்றய தினம் ஊ டகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தலமையிலான குழுவினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கள் புதிதாக மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளை, பார்வையிட்டிருந்தனர்.
இதன்போது பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி ல கோரிக்கைகளை விடுத்திருந்தனர். குறிப்பாக சாந்தை சந்தியிலிருந்து 150 மீற்றர் நீளமா ன வீதி, அச்சுவேலி சிமெற்றி வீதி, ஆகிய வீதிகளை விடுவித்துக் கொடுக்குமாறும், பாட சாலைகள், ஆலயங்களை மக்கள் பயன்பாட்டுக்காக விடுவிக்குமாறும், வசாவிளான் பகுதியில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதியில் படைமுகாம் அமைந்துள்ள காணியில் உள்ள 60 வீடுகளை விடுவிக்குமாறும் இன்னும் சில கோரிக்கைகளும் விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மீள்குடியேற்ற அமைச்சு மேற்படி 60 வீடுகளை விடுவிப்பதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதுடன், மேற்படி இரு வீதிகளையும், விடுவிப்பதற்கும், ஒட்டகப்புலம் ஜீ.ரி.எம்.எஸ் பாடசாலையையும் விடுவிப்பதற்கு ஒப்புதல் வழங்கியிருக்கின்றது.
மேலும் உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள 7 கோவில்களை மக்கள் வழிபாட்டுக்காக விடுவிப்பதற்கும் ஒப்புதல் வழங்கியிருக்கின்றது. இந்நிலையில் அடுத்த கட்டமாக இந்த கோரிக்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.