மக்கள் புரட்சி வெடிக்கவேண்டும் ஏன் மக்கள் புரட்சி வெடிக்கவில்லை? அரசியல்வாதிகளின் முகத்திரையினைக் கிழித்த அரசியல் விமர்சகர் ஜனகதீபன்

260

 

 

ஏன் மக்கள் புரட்சி வெடிக்கவில்லை?

மக்கள் புரட்சி வெடிக்கவேண்டும் அரசியல் வாதிகளை ஆற்பாட்டங்கள் உண்னாவிரதப்போராட்டங்களுக்கு செய்திகளுக்கு போஸ் கொடுக்கக்கூட எடுக்கக்கூடாது அரசியல்வாதிகளின் முகத்திரையினைக் கிழித்த அரசியல் விமர்சகர் ஜனகதீபன்

அரசின் மீது இருக்கும் மக்களுக்கான கோபம் எரி குழம்பாய் கொதித்துக் கொண்டிருக்கின்றன என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

அதே சமயத்தில் அந்த மக்களின் கோபத்தை மட்டுபடுத்தி சாம்பல் ஆக்கும் ஒரு சூழல்தான் நாம் நடத்தும் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும்.

இத்தகைய ஒரு நடவடிக்கைகளை நாம் எடுத்தவுடன் ஏதோ ஓர் ரீதியில் அரசின் மீது இருந்த கோபத்தை வெளியேற்றிவிட்டோம் என்ற சமாதானத்தில் மக்கள் களைந்து சென்று விடுகிறார்கள்.எனவே ஜனநாயகம் பூசி போராட்டம் நடத்தும் போக்கும், அதற்கான இலகுவான அனுமதியும் என்பது அரசியல்வாதிகள் மக்களை மாற்றி மாற்றி ஏமாற்றுவதற்கான ஓர் கண்டுபிடிப்புதானே தவிர நிச்சயம் வேறொன்றும் இல்லை.

ஆனால் இத்தகைய ஏமாற்றுத்தனமான இந்த போராட்டத்திற்கு அதிகமான மக்களை யார் கூட்டினார்கள் என்ற மீளாய்வுகள்தான் இயக்கங்கள் மற்றும் கட்சிகளுக்கிடையே நடக்கிறதே தவிர அதனால் நாம் என்ன பலனடைந்தோம் என்பதனை மீளாய்வு செய்தோர் யாருமில்லை.

நாம் புரட்சிகரமான மக்களை உருவாக்குகிறோமா அல்லது சொரனையற்ற மக்களாக உருவாக்குகிறோமா???

இதற்கு யார் காரணம்???

SHARE