மங்­கள சம­ர­வீ­ர­வுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை

183

இறுதி யுத்­தத்தில் இடம்­பெற்­றுள்­ள­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல் கள் தொடர்பில் நீதி வழங்கும் விசா­ரணை பொறி­மு­றையில் சர்­வ­தேச நீதி­ப­தி ­க­ளுக்கு எவ்­வி­தத்­திலும் இட­மில்லை. இது குறித்து ஜனா­தி­ப­தியின் நிலைப்­பாட்­டிற்கு எதி­ரான வகையில் கருத்­து­களை தெரி­வித்து நாட்டின் அர­சி­ய­ல­மைப்பை சவா­லுக்கு உட்­ப­டுத்தும் வெளி­வி­வ­கார அமைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிர­ரே­ர­ணையை கொண்டு வரு­வ­தற்­கான சாத்­தியம் குறித்தும் ஆராய்ந்து வரு­வ­தாக ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி தெரி­வித்­துள்­ளது.

இறுதி யுத்­தத்தில் இடம்­பெற்­றுள்­ள­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஸ்தாபிக்­கப்­ப­ட­வுள்ள உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவின் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க சர்­வ­தேச நீதி­ப­தி­களின் ஒத்­து­ழைப்­பு­களை பெறு­வதில் தவ­றில்லை என வெளி­வி­வ­கார அமைச்சர் தெரி­வித்த கருத்து தொடர்பில் வின­விய போதே ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யினை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உத­ய­கம்­பன்­பில மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்­பில்­தொ­டர்ந்து கருத்து தெரி­வித்த அவர்.

தேசிய அர­சாங்கம் என்ற வகையில் ஒரு­மித்த செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­வ­தாக தெரி­விக்கும் இந்த அர­சாங்­க­மா­னது நாட்டின் சுயா­தீன தன்­மைக்கு பங்­கத்தை விளை­விக்கும் பாரிய விட­யம்­தொ­டர்பில் வேறுப்­பட்ட கருத்­து­களை தெரி­வித்து சர்­வ­தே­சத்­துடன் விளை­யாடி கொண்­டி­ருக்­கின்­றது

எந்­த­வொரு விசா­ரணை நட­வ­டிக்­கை­க­ளுக்கும் எமது நாட்டின் நீதித்­துறை சட்­டத்தின் பிர­காரம் சர்­வ­தேச நீதி­ப­தி­க­ளையும் வழக்­க­றி­ஞர்­க­ளையும் விசா­ர­ணை­யா­ளர்­க­ளையும் நாட்­டுக்­குள்­அ­னு­ம­திக்க முடி­யாது. இவ்­வி­ட­யத்தில் நாம் உறு­தி­யா­கவே உள்ளோம்.

இறுதி யுத்­தத்தில் இடம்­பெற்­றுள்­ள­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதி வழங்கும் விசா­ரணை பொறி­மு­றையில் சர்­வ­தேச நீதி­ப­தி­க­ளுக்கு எவ்­வி­தத்­திலும் இட­மில்லை என தொடர்ச்­சி­யாக தனது நிலைப்­பாட்டை ஜனா­தி­பதி தெட்ட தெளி­வாக குறிப்­பிட்­டி­ருந்தார். இவ்­வா­றான நிலையில் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர அன்­மையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஸ்தாபிக்­கப்­ப­ட­வுள்ள உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவின் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க சர்­வ­தேச நீதி­ப­தி­களின் ஒத்­து­ழைப்­பு­களை பெறு­வ­தில்­த­வ­றில்லை என தெரி­வித்­தி­ருந்தார்.

நாட்டின் ஜனா­தி­பதி கூறும் விடயம் தொடர்பில் எதி­ரான மாற்று கருத்­து­களை கூறும் இவரின் செயற்­பா­டா­னது மிகவும் கண்­டிக்­கத்­தக்­கது. அந்­த­வ­கையில் அமைச்சர் ம்கள­வுக்கு எதி­ராக சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுப்­பது தொடர்பில் நாம் ஆராய்ந்து வரு­கின்றோம். அந்­த­வ­கையில் எதிர்­வரும் பாரா­ளு­மன்ற அமர்­வு­களின் இவர்­தொ­டர்பில் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை­யினை கொண்­டு­வ­ரு­வது தொடர்­பில்­ஒன்­றி­ணைந்த எதிர்க்கட்சியினை சேர்ந்த நாம் ஆராய்ந்து வருகின்றோம்

நல்லாட்சி அரசாங்கத்தின் அங்கத்துவம் பெறும் உறுப்பினர்கள் எவ்வாறான கோரிக்கைகளை விடுத்தாலும் இவ்விடயம்தொடர்பில் சர்வதேச நீதிபதிகளை நாம்ஒரு போதும் ஏற்றுக்கொள்ள போவது இல்லை. அதோடு எமது நாட்டின் நீதித்துறைக்கு சவால்விடும்செயற்பாடுகளுக்கு எவ்வாறாயினும் இடம்மளிக்க முடியாது என்றார்.

mangala-1

SHARE