மங்காத்தாவிற்கு பிறகு தான் எனக்கு இத்தனை பிரச்சனை- ப்ரேம்ஜி

304

அஜித் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல் என்றால் மங்காத்தா தான். இப்படத்திற்கு பிறகு தான் அஜித்தின் மார்க்கெட் தென்னிந்தியா முழுவதும் பிரபலமடைந்தது.

இப்படத்தில் நடித்த ப்ரேம்ஜி, அதன் பிறகு டுவிட்டரில் விஜய் ரசிகர்களால் அடிக்கடி தாக்கப்படுவார். அவரும் பதிலுக்கு அவர்களை தாக்கி பேசுவார்.

இந்நிலையில் இவர் தற்போது ஹீரோவாக நடித்து வெளிவரவிருக்கும் மாங்கா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ‘மங்காத்தா படத்திற்கு பிறகு தான் எனக்கு டுவிட்டரில் தாக்குதல் அதிகம் வந்தது, அது யார் செய்வார்கள் என்று உங்களுக்கே தெரியும், ஆனால், அதையெல்லாம் நான் கண்டுக்கொள்வதே இல்லை’ என கூறியுள்ளார்.

SHARE