மசாஜ் செய்து கொள்ள சென்ற முதியவர் மரணம்

246

Covered-dead-body-in-the-morgue-MG-5733

மசாஜ் செய்து கொள்வதற்காக மசாஜ் பார்லருக்கு சென்ற முதியவர் ஒருவர் மரணித்துள்ளார்.

கண்டி கட்டுகஸ்தோட்டை பகுதியில் அமைந்துள்ள மசாஜ் பார்லர் ஒன்றின் மலசல கூடத்தில் குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அக்குரண பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதான வர்த்தகர் ஒருவரே இவ்வாறு நேற்று மசாஜ் பார்லரில் உயிரிழந்துள்ளார்.

மசாஜ் செய்து கொள்வதற்காக வந்த நபர், மலசல கூடத்திற்கு சென்று நீண்ட நேரம் வெளியே வரவில்லை என்ற காரணத்தினால், அதன் ஊழியர்கள் இது குறித்து கவனம் செலுத்திய போது முதியவர் இறந்த நிலையில் மலசல கூடத்தில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

SHARE