மடுவில் சித்த மத்திய மருந்தகம் திறந்துவைப்பு

261
-மன்னார் நகர் நிருபர்-
 
மாகாண சுதேச வைத்திய திணைக்களத்தினால்  மடு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட ‘மடு சித்த மத்திய மருந்தகம்’ இன்று (2) திங்கட்கிழமை காலை 11 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சித்த மத்திய மருந்தகத்தை பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
  
  
மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் சுமார் 11 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த சித்த மத்திய மருந்தகம் அமைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியான்ஸ் பிள்ளை, மடு பிரதேசச் செயலாளர்,மாகாண சுதேச வைத்திய திணைக்கள உதவி ஆணையாளர் உற்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
SHARE