சுவிட்சர்லாந்தில் தமிழ் கத்தோலிக்க மக்கள் வருடாந்தம் கொண்டாடும் மடு மாதா திருவிழா இந்த வருடமும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
மரியஸ்ரைன் மாதா திருத்தலத்தில் கடந்த 19ஆம் திகதி மடு அன்னையின் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது.
குறித்த திருவிழாவில் சுவிட்சர்லாந்தின் பல பாகங்களில் இருந்தும் ஆயிரம் கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளதுடன், மடு அன்னையின் ஆசிரையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மடு அன்னையின் திருச்சொரூபம் பவனியாக எடுத்து வரப்பட்டு திருச்சொரூப ஆசீர்வாதம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஈழத்தின் மடு திருத்தளத்தின் நினைவுகளை மீட்கும் வகையில் ஆலயத்தின் வழிபாட்டு அமைப்புக்கள் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத் தக்கது.
திருவழாத் திருப்பலியினை திருகோணமலை மறைமாவட்டத்தின் அருட்தந்தை ரஜீவன் தலைமையேற்று நடத்தியிருந்தார். இக் கூட்டுத் திருப்பலியில் இலங்கை மற்றும் இந்தியாவின் பல துறவிகள் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.
திருவிழாவிற்கான அனைத்து ஏறிபாடுகளையும் சுவிட்சலாந்து ஆன்மீக பணியக இயக்குணர் அருட்தந்தை டக்ளஸ் மிக சிறப்பாக செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.