மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாண தமிழர்கள் வெளியேற்றம்- கருணா குழு செய்த வரலாற்று தவறு-ஆனால் இதனை தடுத்து நிறுத்தியவர் மற்றுமோர் துரோகி டக்ளஸ் தான்

115

 

மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாண தமிழர்கள் வெளியேற்றம்- கருணா குழு செய்த வரலாற்று தவறு.-ஆனால் இதனை தடுத்து நிறுத்தியவர் மற்றுமோர் துரோகி டக்ளஸ் தான்

வேளையில் மட்டக்களப்பில் இருந்த யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட வர்த்தகவர்கள் அரச ஊழியர்களை மட்டக்களப்பை விட்டு வெளியேறுமாறு கருணா குழுவினர் அறிவித்தனர். வர்த்தக சங்க தலைவராக இருந்த ராசன் சத்தியமூர்த்தியிடம் வர்த்தகவர்கள் சென்று முறையிட்டனர். ஆனால் தன்னால் எதுவும் செய்ய முடியாது, நீங்கள் மட்டக்களப்பை விட்டு வெளியேறத்தான் வேண்டும் என பதிலளித்தார்.

இது மட்டக்களப்பு நகரில் மேலும் அச்சத்தையும் பதற்றத்தையும் அதிகரித்தது. உடனடியாக கருணா தரப்பினர் யாழ்ப்பாண மக்களுக்கு கடுமையான உத்தரவை பிறப்பித்தனர். அன்று நள்ளிரவு 12மணிக்கு முதல் மட்டக்களப்பை விட்டு யாழ்ப்பாண வர்த்தகவர்கள், அரச ஊழியர்கள், வைத்தியர்கள், பொதுமக்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டனர்.

1956, 1983 காலங்களில் தென்னிலங்கையில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டது போல மட்டக்களப்பிலிருந்து வடபகுதி தமிழர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவமும் இடம்பெற்றது.

1980களில் மட்டக்களப்பின் பிரதான நகரங்களின் வர்த்தக நிலையங்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களின் கைகளிலேயே இருந்தது. வாழைச்சேனை, செங்கலடி, மட்டக்களப்பு நகரம், களுவாஞ்சிக்குடி போன்ற நகரங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் குறிப்பாக பலசரங்கு கடைகளும், யாழ்ப்பாணத்தவர்களின் கைகளிலேயே இருந்தது. விநியோகஸ்தர்களாகவும் அவர்களே இருந்தனர்.

பின்னர் தமிழ் இயக்கங்கள் தொல்லைகளால் சிலர் தமது கடைகளை முஸ்லீம்களுக்கு விற்று விட்டு சென்றனர். 2004ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் திகதி கருணா தரப்பின் அறிவிப்பால் வடபகுதி வர்த்தகர்கள் அனைவரும் வெளியேறவேண்டிய அவலம் ஏற்பட்டது.

மட்டக்களப்பில் இருந்த யாழ்ப்பாண வர்த்தகர்கள் என அடையாளம் காணப்பட்ட பலர் மட்டக்களப்பில் பிறந்து வளர்ந்தவர்கள் தான். அவர்களின் பெற்றோர் அல்லது பாட்டன் யாழ்ப்பாணத்தில் பிறந்தவராக இருந்த போதிலும் அவர்கள் காலம் காலமாக மட்டக்களப்பையே தமது சொந்த மண் என எண்ணி வாழ்ந்தவர்கள். உதாரணமாக ஆஞ்சநேயர் மரக்காலை, இராஜேஸ்வரி ஸ்ரோர்ஸ், பரமேஸ்வரி ஸ்ரோர்ஸ், உட்பட பல கடைகளின் உரிமையாளர்களாக இருந்தவர்கள் மட்டக்களப்பில் பிறந்து வளர்ந்தவர்கள்.

இவர்கள் அனைவரையும் உடனடியாக மட்டக்களப்பை விட்டு வெளியேறுமாறு கருணா குழுவின் அறிவிப்பால் மட்டக்களப்பில் இருந்த யாழ்ப்பாணத்தவர்கள் மட்டுமல்ல மட்டக்களப்பு மக்களும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

மட்டக்களப்பு நகரில் மட்டும் 15ஆயிரத்திற்கு மேற்பட்ட வடமாகாணத்தை சேர்ந்தவர்கள் வசித்து வந்தனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய பல வைத்தியர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். மாவட்ட செயலகத்திலும் பலர் பணியாற்றினர். கிழக்கு பல்கலைக்கழகத்தில் உபவேந்தர் உட்பட பெரும்பாலான விரிவுரையாளர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களாகும்.

வடபகுதியை சேர்ந்த அனைவரும் நள்ளிரவு 12மணிக்கு முதல் மட்டக்களப்பை விட்டு வெளியேற வேண்டும் என்றும் இவர்கள் 500ரூபாவுக்கு உட்பட்ட பணத்தை மட்டுமே எடுத்து செல்லலாம் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. Batticaloa city

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் என பலரும் மட்டக்களப்பை விட்டு வெளியேறினர். கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட அரச உத்தியோகத்தர்களும் வெளியேறினர். காலம் காலமாக மட்டக்களப்பையே தமது பூர்வீகமாக எண்ணி வாழ்ந்த வர்த்தகர்களும் வெறும் கையுடன் 500ரூபா பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு வெளியேறினர். இவர்களை பிள்ளையாரடி போன்ற இடங்களில் நின்ற கருணா குழுவினர் மேலதிகமாக பணத்தையோ அல்லது சொத்துக்களையோ எடுத்து செல்கிறார்களாக என சோதனை செய்தனர்.

மட்டக்களப்பிலிருந்து வெளியேறிய யாழ்ப்பாண வர்த்தகர்கள் பலர் தமது வர்த்தக நிலையங்களை கொழும்பில் வைத்து முஸ்லீம் வர்த்தகர்களுக்கு விற்றனர். கருணா குழுவினரின் இச்செயலால் மட்டக்களப்பு நகரில் இருந்த வர்த்தகம் முழுமையாக முஸ்லீம் வர்த்தகர்களின் கைகளுக்கு சென்றது

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களின் ஆதிக்கம் ஓங்குவதற்கு இந்த கருணா என்னும் துரோகியே காரணம் என்பதற்க்கு இந்த நிகழ்வும் நல்ல உதாரணங்களில் ஒன்று.

SHARE