மட்டக்களப்பில் அஞ்சல், தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தினரின் கவன ஈர்ப்பு போராட்டம்..!

146

மட்டக்களப்பு அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தினரின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை மட்டக்களப்பு நகரின் பிரதான தபாலகத்திற்கு முன்னால் நடைபெற்றுள்ளது.

நாடு தழுவிய ரீதியில் பல கோரிக்கைகளை முன்வைத்து, இடம்பெற்று வரும் தொடர்ச்சியான தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவே தாம் மட்டக்களப்பில் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறீநேசன், எஸ்.வியாழேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, சக்தி வாய்ந்த அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கங்கம் மற்றும் ஒருங்கிணைந்த தபால் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் தொடர் வேலை நிறுத்தத்தால் கடந்த 12ஆம் திகதியிலிருந்து நாட்டின் சகல அஞ்சல் சேவைகளும் ஸ்தம்பித்துள்ளது, இதனால் நாட்டு மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

SHARE