மட்டக்களப்பில் அழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

297
மட்டக்களப்பு ஊரணியில் அழுகிய நிலையில் கிடந்த சடலமொன்று இன்று பகல் மீட்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் 1.30 மணியளவில் மட்டக்களப்பு ஊரணிச்சந்தியில் உள்ள பாழடைந்த காணியொனன்றில் பாவிக்கப்படாத நிலையில் இருந்த கழிவறையில் இருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் ஆண் ஓருவருடையது என அடையாளம் காணக்கூடியதாகவுள்ளது.

துர்நாற்றம் விசும் நிலையில் காணப்படும் குறித்த சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை.

குறித்த சடலம் யாருடையதாக இருக்கலாம்? சடலத்தை யார் இங்கு கொண்டுவந்து போட்டார்கள் மரணத்திற்கான காரணம் கொலையா? தற்கொலையா? போன்ற பல்வேறுபட் கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.

SHARE