மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவன்கேணி 2இல் கஞ்சாவுடன் நடமாடிய இளைஞர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, குறித்த இளைஞன் நடமாடித் திரியும் பகுதிக்குச் சென்ற பொலிஸ் ரோந்துப் பிரிவினர், அங்கிருந்து கஞ்சாவுடன் இவரைக் இன்று கைதுசெய்துள்ளனர்.
களுவன்கேணியிலுள்ள வீதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட 21 வயதான சந்தேகநபரிடமிருந்து 3,590 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை அண்மைக்காலமாக இலங்கையின் பெரும்பாலான பகுதிகள் அதிகளவான இளைஞர்கள் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு பின்னர் பொலிஸார் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். குறிப்பாக நேற்றைய தினம் யாழ். மாவட்டத்தில் இரண்டு இளைஞர்கள் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.