மட்டக்களப்பில் கைத்தொழில் பேட்டை அமைப்பதற்கு அமைச்சரவை நேற்றைய தினம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கைத்தொழில் பேட்டை அமைப்பது தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்தை கைத்தொழில் மற்றம் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியூதின் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.
கைத்தொழில் பேட்டை அமைப்பதன் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் வாய்ப்புகள் கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.