மட்டக்களப்பில் பரீட்சார்த்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த உதயதேவி புகையிரதம் தடம் புரண்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று காலை 6 மணியளவில் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அனர்த்தம் ஏற்படும்போது அதிஷ்டவசமாக பயணிகள் யாரும் புகையிரதத்திற்குள் இருக்கவில்லை.இதனால் எந்த விதமான உயிர் சேதங்களும் இடம்பெறவில்லை என அறியமுடிகின்றது.
தடம்புரண்ட புகையிரதத்தை சீர்செய்வதற்கு பல மணி நேரம் முயற்சி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.