மட்டக்களப்பில் வரட்சி

341

மட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் தேவைக்கு போதாதுள்ளதாகவும் இதனால் குடிநீருக்கு பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு – மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சி காரணமாக சுமார் 20 ஆயிரம் குடும்பங்கள் குடிநீர் வசதியை இழந்துள்ளனர்.

இவர்களுக்கான குடிநீர் வசதியை அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.

இந்த மாவட்டத்தில் வவுணதீவு, கொக்கடிச்சோலை, வெல்லாவெளி, கிரான், செங்கலடி ஆகிய பிரதேசங்கள் வரட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுயள்ளன.
இந்தப் பிரதேசங்களுக்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினூடாக பௌசர் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் என். இன்பராஜன் தெரிவித்தார்.
Download (1)

Download (2)

Download (3)

Download (4)

Download

SHARE