மட்டக்களப்பு – ஆரையம்பதி – சிகரம் கிராமத்தில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுவன் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிகரம் கிராமத்தைச் சேர்ந்த தரம் இரண்டில் கல்வி கற்கும் 7 வயதுடைய சிறுமி ஒருவரே தனது மாமா முறையான 15 வயது சிறுவனினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுவன் அந்த சிறுமியின் வீட்டுக்கு சென்று வரும் நிலையிலேயே இந்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து கைது செய்யப்பட்ட சிறுவனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.