மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பகுதியிலுள்ள வீடொன்று கடந்த (13) ஞாயிற்றுக்கிழமை தீப்பிடித்து எரிந்துள்ளது. வீட்டிலிருந்த கட்டில், அலுமாரி, கதிரைகள் உள்ளிட்ட பல பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.
இன்று அவ் வீட்டை சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் உடனடியாக அவ் வீட்டிற்கு இலவச மின்சார இணைப்பை பெற்றுக் கொடுத்ததுடன், கட்டில் மற்றும் மெத்தை என்பவற்றையும் வீட்டினருக்கு பெற்றுக்கொடுத்தார்.