மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட சித்தாண்டியில் கடை முற்றாக தீக்கிரை – பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசம்

493

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட சித்தாண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள கஸ்விதா இரும்புக் கடை முற்றாக எரிந்து தீக்கிரையாகிய சம்பமொன்று இன்று அதிகாலை சுமார் மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கடை இரும்புப் பொருட்களை விற்பனை செய்யும் பல்பொருள் கடையென்பதால் குறித்த கடையில் உள்ள அனைத்து பொருட்களும் முற்றாக எரிந்துள்ளது.

கடையில் அதிகளவான வர்ண பூச்சு கொள்கலன்கள், தண்ணீர் தாங்கி கொள்கலன்கள், மின்சார இணைப்பு வயர்கள், பிளாஸ்டிப் பொருட்கள், சமையல் வாயு சில்ண்டர்கள் என பெறுமதியான அனைத்துப் பொருட்களும் எரிந்து சாம்பலாகிய நிலையில் ஒருசில இரும்பு பொருட்கள் மாத்திரம் மிச்சிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளாகிய துஸ்யந்தகுமார் குமுதினி தெரிவிக்கையில்,

வழமையாக கடையை இரவு வேளை எட்டு மணிக்கு மூடும் முன்பு கடையிலுள்ள அனைத்து பொருட்களையும் கடைக்குள் உள்வைத்து மின் விளக்குகள் எல்லாவற்றையும் அனைத்து விட்டுதான் வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று அதிகாலை எழுந்து பார்க்கும்போது கடை தீப்பிடித்து பற்றியெரிவதாகவும் அதன் பின்னர் தீயை கட்டுப்படுத்த பாரிய பிரயத்தனம் மேற்கொண்டபோதும் குறித்த நேரத்துக்குள் அனைத்துப் பொருட்களும் முற்றாக எரிந்து சாம்பலாயிற்று என தெரித்ததுடன் சம்பவ தினத்தன்று பணமாக 12000 பெறுமதியான பண இருந்ததாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை தங்களின் கடைக்குள் சுமார் 22 சமையல் எரிவாயு சிலிண்டர் இருந்தாகவும் தெரிவித்துள்ளார்.

கடையின் கட்டடம் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் கடையில் 50 இலட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து சாம்பலாகியுள்ளதாக மிகவும் மன வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து மேலதிக விசாரணைய மேற்கொண்டு வருகின்றனர்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-7 625-0-560-320-160-600-053-800-668-160-90-8 625-0-560-320-160-600-053-800-668-160-90-9 625-0-560-320-160-600-053-800-668-160-90-10 625-0-560-320-160-600-053-800-668-160-90-11

SHARE