மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரையம்பதி தாளங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலயத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் 6.5 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய மாடிக்கட்டிடத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமனற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
பாடசாலை அதிபர் சா.மதிசுதன் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா வைபவத்தில் மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் உட்பட கல்வி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
குறித்த பாடசாலையில் நீண்டகாலமாய் நிலவிய பாடசாலை வகுப்பறைக் கட்டிடங்கள் இல்லாத குறைபாடு இதன் மூலம் தீர்க்கப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்தார்.
விரைவில் இப்பாடசாலையில் நிலவும் தளர்பாட பற்றாக்குறைகளையும் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு நிருபர்-