மட்டக்களப்பு களுதாவளை ஸ்ரீ சுயம்புலிங்கப் பிள்ளையார் அருளாசியுடன் ஸ்ரீ ஏகாதச ருத்ர வேள்வி

204
மட்டக்களப்பு களுதாவளை ஸ்ரீ சுயம்புலிங்கப் பிள்ளையார் அருளாசியுடன் ஸ்ரீ ஏகாதச ருத்ர வேள்வி கடந்த 19ஆந்திகதி முதல் நடைபெற்று வருகிறது. 22.11.2018 வியாழக்கிழமை நிறைவு நாள். அதிகாலையில் ஏகாதச ருத்ர ஜெபத்துடன் சிவபூஜைகள் ஆரம்பமாகி தென்னிந்திய பிரபல கர்நாடக இசைப்பாடகி கானவிநோதினி கலைமாமணி டாக்டர் நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் சிவபுராணம் பாடி அனைத்து வரங்களையும் நல்கக்கூடிய ஸ்ரீ ஏகாதச ருத்ர வேள்வியைத் துவக்கி வைக்க பிரமாண்டமான ருத்ர வேள்வி ஆரம்பமாகி தொடர்ந்து சித்தர்களால் பூஜிக்கப்பட்ட மரகதலிங்கத்துக்கு ஏகாதச ருத்ராபிஷேகம் நடைபெற்று 11 வகையான தானங்கள் நடைபெறும். இறுதியாக மகா பூர்ணாகுதி – ஆசியுரைகள் இடம்பெற்று ஸ்ரீ ஏகாதச ருத்ர மகாவேள்வி நிறைவுறும். இந்த யாகத்தால் இலங்கைவேந்தன் இராணவன் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாகவும், இன்றுமுதல் தனது இலங்காபுரி மக்கள் சகல சொபாக்கியங்களும், இந்த உலகத்தை ஆளும் 210 மகா சித்தர்களின் பரிபூரண ஆசியுடன் வாழ்வார்கள் என வாழ்த்துவதாகவும், குறுமுனி எனப்படும் மகா முனி ஸ்ரீ ஆகத்தியருடைய பரிபூரண கருணையாலும் இந்த வேள்வி பகவான் காகமுனிவருடைய அடிமை ஸ்ரீ அன்னைச் சித்தரின் அருளாணைப்படி சித்தர்களின் குரல் என்ற அமைப்பினுடைய மெய்யன்பர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டு ஸ்ரீலஸ்ரீ சிவசங்கர் அவர்களால் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. மகா யாகத்தின் பிரதம சிவாச்சாரியாராக பொன்னாலை வரதராஜப்பெருமாள் ஆலய பிரதச குரு சிவஸ்ரீ சோமாஸ்கந்தக் குரக்களும், சதுர்வேதபாராயணத்தை மயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் பிரதம குரு சசிவஸ்ரீ டாக்டர் ஸ்ரீனிவாச சசாஸ்திரிகளும் நிகழ்துத்துவதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 20 செவ்வாய்க்கிழமை நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளும், சின்மயாமிஷன் சுவாமி பிரம்மச்சாரி சீதாகாசானந்தா அவர்களும் கலந்து சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.
SHARE