மட்டக்களப்பு-களுமுந்தன்வெளியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

241

accident45611-04-1470285877

மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுமுந்தன்வெளியில் இன்று (06) காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

களுமுந்தன் வெளியில் தனது வீட்டுக்கு முன்பாக பூ பறித்துக்கொண்டிருந்த பெண் மீது மூன்று பேர் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது நான்கு பேரும் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

களுமுந்தன்வெளியை சேர்ந்த த.தேவிகா(54வயது), த.மயூரன்(25வயது), ம.பிரதீபன்(24வயது), க.அபிஸன்(17வயது), த.தேவிகா(54வயது) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.

இதன்போது பூப்பறித்த பெண்ணும் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்ற மயூரன் என்பவரும் மோசமான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பிலான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

SHARE