மட்டக்களப்பு–கொழும்பு நெடுஞ்சாலையின் பிள்ளையாரடி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம்.

152

மட்டக்களப்பு–கொழும்பு நெடுஞ்சாலையின் பிள்ளையாரடி பகுதியில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த இளைஞர்கள் இருவர் அதிவேகத்துடன் முன்னாள் சென்றுகொண்டிருந்த பஸ்ஸை மற்றொரு பஸ் முந்திச் செல்ல முற்பட்;டபோது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதி விட்டு விவகி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் படுகாயமடைந்ததோடு மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.வாகன விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம்

SHARE