மட்டக்களப்பு நகரில் ஐந்து வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளை

262
மட்டக்களப்பு நகரில் உள்ள ஐந்து வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் உள்ள ஐந்து வர்த்தக நிலையங்களே இவ்வாறு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகர் உட்பட பல பகுதிகளில் அண்மைக்காலமாக இனந்தெரியாதவர்களினால் வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.

இதன்கீழ் இன்று அதிகாலை கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம்,கொமினிகேசன்,பாமசி உட்பட ஐந்து வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளன.

அப்பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்வருகின்றனர்.

SHARE