மட்டக்களப்பு-ரிதிதென்ன பகுதியில் அமைச்சர் ஹிஸ்புல்லாவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு BOI அனுமதிச் சான்றிதழ் வழங்கப்பட்டு முதலீட்டு சபையினுடைய நிறுவனமாக அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ரிதிதென்னெயில் ஆரம்பிக்கப்பட்டுள்ள Batticaloa campus நிறுவனத்தை இலங்கை முதலீட்டு சபை (BOI) நிறுவனத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக இன்று அங்கீகரித்துள்ளது.
இதன் பிரகாரம் இன்று BOI நிறுவனத்திற்கும் Batticaloa campusற்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு அதற்கான கட்டட வேலைகள் இப்பொழுது மட்டக்களப்பின் எல்லைக் கிராமமான புனானை ஜயந்தியாய கிராமத்தில் கட்டப்பட்டு வருகிறது.
எதிர்வருகின்ற 2017 ஜூலை மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள Batticaloa campus ஐ இலங்கை முதலீட்டு சபை தனது சபையின் கீழ் அங்கீகரித்துள்ளது.
அதற்கான உடன்படிக்கை இலங்கை முதலீட்டு சபையின் தலைமைக் காரியாலயமான கொழும்பு உலக வர்த்தக மையத்தின் 25வது மாடியில் கைச்சாத்திடப்பட்டது.
இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி உபுல் ஜயசூரிய அவர்களும் Batticaloa campus இன் தலைவர் இராஜாங்க அமைச்சர் M.L.A.M.ஹிஸ்புல்லாஹ் இதன் முகாமைத்துவப் பணிப்பாளர் அஹமட் ஹிறாஸ் ஹிஸ்புல்லாஹ் அவர்களும் இன்று இவ்வுடன்படிக்கையில் கைச்சாத்திட்டார்கள்.
இதன் பிரகாரம் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு பேராசியர்களை இங்கு கொண்டு வருவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பதோடு வெளிநாட்டு முதலீடுகளை தாரளமாக எந்த விதமான வரியுமில்லாமல் கொண்டு வருவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பல்கலைக்கழகத்தை கட்டி எழுப்புவதற்குத் தேவையான சகல தளபாடங்கள் மற்றும் உபகரணங்களையும் எந்த விதமான வரியுமில்லாமல் நேரடியாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கும், அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதே போன்று இந் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு 10 வருடங்களுக்கு அரசாங்கத்திற்கு எந்த வித வரியும் வழங்க வேண்டியதில்லை. இவ்வாறான சலுகைகளை இந்த உடன்படிக்கை மூலம் பெறப்பட்டுள்ளது.
எனவே Batticaloa campus வரலாற்றில் முக்கிய அம்சம் என்றும் அதற்காக எல்லாம் வல்ல இறைவனுக்கும் நன்றி செலுத்துகின்றோம் என்றும் Batticaloa campus ன் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான M.L.A.M. ஹிஸ்புல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
Batticaloa campus 3000 மாணவர்களைக் கொண்டு எதிர்காலத்திலே 16 பீடங்களையும் கொண்டு நிர்மாணிக்கப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.