மட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர் .
இந்த சம்பவத்தில் காயமடைந்த அறுவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் நால்வர் உயிரிழந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
காயமடைந்த ஏனையோர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்குளி – சமித்புற பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பத்துக்கு மேற்பட்டவர்கள் மீது இனந்தெரியாத கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த ஆறு பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் நால்வர் உயிரிழந்ததாகவும் ,மற்றும் படுகாயமடைந்த இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
என்ன காரணத்திற்காக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் தகவல் வெளியாகவில்லை.
இதேவேளை , பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாதாள உலக குழு தலைவர் பலி
மட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பாதாள உலக குழு தலைவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பாதாள உலக குழு தலைவரான “குடு சூட்டி” என்ற நபரே உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.